சுடச் சுடச் செய்திகள்

உணவங்காடி கலாசாரம் பரிந்துரை: மலேசியா மேற்கொண்டு நடவடிக்கை

கோலாலம்பூர்: உணவங்காடி கலாசாரத்தை யுனெஸ்கோ விருதுக்கு சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து மனு செய்ய சென்ற மாதம் சிங்கப்பூருக்கு பரிந்துரைத்தது மலேசியா. இது தொடர்பாக மலேசியா மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளது. 

கடந்த வாரம் செய்தி வெளியிடப்பட்டதுபோல, யுனெஸ்கோ விருதுக்கு கூட்டு நியமனம் தொடர்பில் பினாங்கு மாநில அரசாங்கத்திடமிருந்து தமக்கு அதிகாரபூர்வமான கோரிக்கை  வரவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார் மலேசியாவின் சுற்றுப்பயணம், கலைகள், கலாசாரத் துறை துணை அமைச்சர் முகம்மது பாக்தியார் வான் சிக்.

என்றாலும், மலேசியாவுக்கான சிங்கப்பூர் துணைத் தூதருடன் தாம் மூன்று வாரங்களுக்கு முன்பு நடத்திய சந்திப்பில் இது குறித்த யோசனையை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார். யுனெஸ்கோ விருதுக்கு மரபுடைமையைப் பரிந்துரைக்க ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உள்ளது என்று திரு பாக்தியார் வலியுறுத்தினாலும் பரிந்துரைகளை ஏற்க ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு வரம்பு இருப்பதை அவர் சுட்டினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon