கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரி ஒருவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார். அவரது மரணத்தைச் சேர்த்து இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 258ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி ஷங்ரிலா ஹோட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மாண்ட திருவாட்டி செல்சி டெக்கமினடாவிற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலய்ன டெப்லிட்ஸ் அஞ்சலி செலுத்தினார்.
டியூக் பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்த திருவாட்டி செல்சி, அமெரிக்க வர்த்தகத் துறைக்காக பணிபுரிந்து வந்தார். வேலை காரணமாக அவர் இலங்கை சென்றிருந்த போது அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதையடுத்து சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் கொண்டு வரப் பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

