வாஷிங்டன்: சீனப் பொருட்களுக்கு எதிராக இவ்வாரம் கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் அறி வித்தார்.
சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்காக பேச்சு வார்த்தை நடத்தி வரும் வேளையில் வடகொரியாவுடனான அணுவாயுதக் களைவு பேச்சு வார்த்தை நடந்துவரும் சூழலில் அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத் தக்கது. இதன்மூலம் அமெரிக்கா தனது கடுமையான வெளியுறவுக் கொள்கையை சோதித்துப் பார்ப்ப தாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
சீனாவுடன் பல மாதங்களாக வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் வேளையில் அதிபர் டிரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளது பேச்சு வார்த்தை தொடர்பில் அவருக்கு ஏற்பட்டுள்ள விரக்தி நிலையைக் காட்டுவதாக கருதப்படுகிறது.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ள சீன அதிகாரிகள் தாங்கள் முன்பு தெரிவித்த கடப்பாடுகளில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அதிபர் இவ்வாறு கூற நேரிட்டதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவுக்கு எதிராக கடுமை யான நிலையை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது உலக ளவில் ஆதிக்கம் செலுத்துவதற் கான கொள்கைப் போராட்டம் என்றும் அதிபர் டிரம்ப்பிடம் அவரது ஆலோசகர்கள் கூறிவருவ தாக செய்தித் தகவல்கள் கூறு கின்றன.

