ஈஸ்டர் தாக்குதல்; சிங்கப்பூர் மருத்துவமனையில் அமெரிக்கர் மரணம்

ஈஸ்டர் தாக்குதல்; சிங்கப்பூர் மருத்துவமனையில் அமெரிக்கர் மரணம்

1 mins read
c57fd198-3d96-48a4-8234-a9809287e909
-

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் கவலைக்கிடமாகக் காயமடைந்த அமெரிக்க அதிகாரி ஒருவர் சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது.

விமானம்வழி இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்ட செல்சி டெக்கமினாடா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதனால் மாண்டோர் எண்ணிக்கை 258க்கு அதிகரித்திருக்கிறது. கடந்த மாதம் 21ஆம் தேதி கொழும்பு நகரிலுள்ள பிரசித்தி பெற்ற சில தேவாலயங்களும் ஹோட்டல்களும் தாக்கப்பட்டன.

இந்நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பின்பற்றும் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டப்போவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்திருக்கிறார். இது தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.