ஏவுகணைகளை மீண்டும் பாய்ச்சிய வடகொரியா

ஏவுகணைகளை மீண்டும் பாய்ச்சிய வடகொரியா

2 mins read
e22d3f18-3592-4887-81bc-25f86eae3329
கடந்த சனிக்கிழமை கிழக்குக் கடலை நோக்கி ஏவுகணைச் சோதனையை நடத்தியது வடகொரியா. படம்: ஏஎஃப்பி -

சோல்: வடகொரியா நேற்று இரு குறுந்தொலைவு ஏவுகணையைப் பாய்ச்சியதாக தென் கொரிய ராணுவத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு ஏவு கணைகளைப் பாய்ச்சி சோதனை நடத்தப்பட்டதை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மேற்பார் வையிட்டு ஒரு வாரம்கூட முடிவ டையாத நிலையில், நேற்று மீண்டும் ஏவுகணை பாய்ச்சப் பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்நாட்டின் கிழக்கை நோக்கி வடமேற்குப் பகுதியிலிருந்து சிங்கப்பூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது. ஆனால், அது தொடர் பான கூடுதல் விவரங்கள் உடன டியாக வெளியிடப்படவில்லை.

கடந்த வாரம் வடகொரியா அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பெருங்கடலை நோக்கி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ராக்கெட்டு களையும் குறுந்தொலைவு ஏவு கணைகளையும் பாய்ச்சி சோதனையைத் தொடங்கியது.

பியோங்யாங்கிற்கும் வா‌ஷிங் டனுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ள வேளையில், அமெரிக்காவை சினமூட்டும் வட கொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலையை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் தான் நடத்திய ஏவுகணைச் சோதனை தற்காப்புப் பயிற்சிக் காகவே என்று விளக்கமளித்துள்ள வடகொரியா, அது மற்ற நாடு களைச் சினமூட்டுவதற்காக செய்த ஒன்றல்ல என்று கூறியது.

பதற்றத்தை அதிகரிக்கும் எல்லா நடவடிக்கைகளையும் வடகொரியா உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு தென்கொரியா அழுத்தம் தந்துள்ளது.

2017ஆம் ஆண்டு நவம்பரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைக் கடைசியாக சோதனை செய்ததையடுத்து கடந்த சனிக்கிழமை குறுந் தொலைவு ஏவுகணையைப் பாய்ச் சியது வடகொரியா.