இலங்கை கத்தோலிக்க தேவாலயம் அறிவிப்பு: அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படும்

இலங்கை கத்தோலிக்க தேவாலயம் அறிவிப்பு: அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படும்

1 mins read

கொழும்பு: இலங்கையில் தற்காலிக மாக மூடப்பட்டுள்ள தனியார் கத்தோலிக்க பள்ளிகள் வரும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் என்று பேராயர் மால்கம் ரஞ்சித் நேற்று தெரிவித்தார்.

கடந்த மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் மூன்று தேவாலயங்களிலும் மூன்று சொகுசு ஹோட்டல்களிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்ப வங்கள் மீண்டும் நிகழக்கூடுமோ என்ற அச்சத்தில் பள்ளிகள் மூடப் பட்டிருந்தன. நாட்டின் 12 பாதிரி யார்கள், அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் நடத்தப் பட்ட சந்திப்பைத் தொடர்ந்து பள்ளிகளைத் திறக்க முடிவெடுக் கப்பட்டதாக பேராயர் ரஞ்சித் கூறினார். இந்நிலையில், போலிஸ், பாதுகாப்புப் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில், 10,000க்கும் அதிகமான அரசு பள்ளிகள் கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டன. எனினும், தொடர் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்ற பயத்தில் பள்ளிகளில் மாண வர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

தலைநகர் கொழும்பில் உள்ள அனைத்து ​தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் வழக்கம் போல இடம்பெறும் என்று பேராயர் ரஞ்சித் தெரிவித்தார். அத்துடன், நலைநகருக்கு வடக்கே உள்ள நீர்கொழும்பில் வரும் வியாழக் கிழமை சிறப்புப் பிரார்த்தனை இடம்பெறும் என்றும் தெரிவிக்கப் பட்டது. நீர்கொழும்பில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் தேவால யத்தில் மட்டும் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அந்தத் தேவால யத்தில் வரும் வியாழக்கிழமை ஆராதனை இடம்பெறும் என்று பேராயர் ரஞ்சித் சொன்னார்.