அரிவாளை பிடித்துக் காரைத் திருடிய ஆடவர்

அரிவாளை பிடித்துக் காரைத் திருடிய ஆடவர்

1 mins read
b7571cbd-8015-4b9f-adc6-c0fc951c874d
-

கோத்தா கினபாலு நகரில் தன் மகனுடன் இருந்த ஒரு பெண் தானியக்க வங்கி இயந்திரத்திலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் கையில் அரிவாளோடு அங்கு வந்திருந்தார். பெண்ணின் காரைத் திருட எண்ணிய அந்த ஆடவர், அரிவாளால் அவர் மகனைக் காயப்படுத்தப்போவதாக மிரட்டி அந்தப் பெண்ணின் கார் சாவியை வாங்கிக்கொண்டார்.

சந்தேக நபரைப்பற்றியோ திருடப்பட்ட காரைப் பற்றியோ ஏதேனும் தெரிந்தால் உடனே அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு கோத்தா கினபாலு போலிஸ் துணை ஆணையாளர் ஹபிபி மஜின்ஜி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.