நஜிப், ரோஸ்மாவின் பட்டங்கள் தற்காலிக ரத்து

நஜிப், ரோஸ்மாவின் பட்டங்கள் தற்காலிக ரத்து

2 mins read
68ca3c48-90c2-40ca-890f-960d594bc838
PHOTO: THE STAR/ASIA NEWS NETWORK -

கிள்ளான்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மன்சூர் ஆகியோருக்கு சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுதீன் இட்ரிஸ் ஷா வழங்கிய டத்தோ ஸ்ரீ பட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இருவருக்கும் எதிராக நீதி மன்ற வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. அவை முடியும்வரை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டங்களை சிலாங்கூர் சுல்தான் தற்காலிகமாக ரத்து செய்துள்ளார்.

இம்மாதம் 6ஆம் தேதி தொடங்கி அந்தத் தற்காலிக ரத்து அமலுக்கு வருவதாக சுல்தானின் செயலாளர் முகம்மது அமின் அஹமட் அஹ் அஹ்யா நேற்று பிற்பகல் கூறினார்.

நஜிப்புக்கு 2004ஆம் ஆண்டில் டத்தோ ஸ்ரீ பட்டத்துடன் கூடிய 'டார்ஜா கெபசாரான் ஸ்ரீ படுக்கா மக்கோத்தா சிலாங்கூர்' முதல் தர பட்டம் வழங்கப்பட்டது.

அதற்கு முன் 1992ஆம் ஆண்டில் அவருக்கு 'டத்தோ படுக்கா மக்கோத்தா சிலாங்கூர்' இரண்டாம் தர பட்டம் வழங்கப் பட்டது. அது டத்தோ பட்டத்தைக் கொண்டது.

"அவர்மீது ஊழல், நம்பிக்கை மோசடி, பண முறைகேடு குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதனால் அவருக்கு வழங்கப் பட்டுள்ள பட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

"நீதிமன்ற வழக்குகள் முடிந் ததும் நிலைமையை சுல்தான் மறுபரிசீலனை செய்வார்," என முகம்மது அமின் கூறினார்.

ரோஸ்மா மீதும் சில வழக்குகள் உள்ளதால் அவருக்கு வழங்கப் பட்ட பட்டங்களும் ரத்து செய்யப் படுகின்றன. வழக்கு முடிந்ததும் சுல்தான் அதையும் பரிசீலனை செய்வார்.

கடந்த அக்டோபர் மாதம் நெகிரி செம்பிலான் அரண் மனையும் நஜிப்=ரோஸ்மா தம்பதி களுக்கு வழங்கப்பட்டிருந்த பட்டங்களை ரத்து செய்தது.

இந்தப் பட்டங்கள் பறிக்கப் பட்டாலும் அவர்களிடம் மற்ற மாநிலங்கள் கொடுத்த பட்டங்கள் அதிகம் உள்ளன. இதற்கிடையே, சூரிய சக்தி திட்டம் தொடர்பில் 5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாக ரோஸ்மா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அவர் மீது சுமத் தப்பட்டுள்ள குற்றச்சாட்டு திருத் தப்பட்டுள்ளது.

குற்றம் நிகழ்ந்த இடம் குறித்து நீதிமன்ற ஆவணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இந்த லஞ்சக் குற்றச்சாட்டை ரோஸ்மா தொடர்ந்து மறுத்து வருகிறார்.

வழக்கு விசாரணை தொடர்கிறது.