தாய்லாந்தில் புயல்: 5,000 வீடுகள் சேதம், 16,000 பேர் பாதிப்பு

தாய்லாந்தில் புயல்: 5,000 வீடுகள் சேதம், 16,000 பேர் பாதிப்பு

1 mins read

பேங்காக்: தாய்லாந்தின் நாக்கோன் ரட்சாசிமா மாகாணம் கடந்த மூன்று மாதங்களாகப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. புயலின் காரணமாக 16,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் புயலின் சீற்றம் அதிகமாக இருந்ததாக மாகாணத்தின் பேரிடர் தடுப்புப் பிரிவின் தலைவர் போர்ன்செட் செங்தோங் தெரிவித்தார். 325 அரிசிக் கிடங்குகள், 318 கால்நடைப் பண்ணைகள், மாகாண அலுவலகங்கள், கோயில்கள் முதலியவை புயலின் காரணமாக சேதமடைந்திருப்பதாக அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க அவசரக்கால நிதி ஒதுக்கீட்டின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தப்போவதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.