தாய்லாந்து அரசரை இகழ்ந்தவருக்கு மன்னிப்பு; சிறையிலிருந்து விடுதலை

தாய்லாந்து அரசரை இகழ்ந்தவருக்கு மன்னிப்பு; சிறையிலிருந்து விடுதலை

1 mins read

பேங்காக்: தாய்லாந்தின் முடியாட்சியை இகழ்ந்த 27 வயது ஜட்டுபாட் பூன்பதராரக்சாவுக்கு அந்நாட்டு அரசர் மன்னிப்பு வழங்கியதை அடுத்து, அவர் சிறையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.

தாய்லாந்து அரசரை இகழும் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்த குற்றத்துக்காக அவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலையான ஜட்டுபாட்டை சிறையின் வாசலில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் வரவேற்றனர்.

"எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. எனக்கு ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவை மட்டும் பிடிக்கும்," என்று ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் அவர் தெரிவித்தார்.