'முன்பே எதிர்கொண்டிருந்தால் 1எம்டிபி விவகாரம் மோசமடைந்திருக்காது'

'முன்பே எதிர்கொண்டிருந்தால் 1எம்டிபி விவகாரம் மோசமடைந்திருக்காது'

1 mins read

பெட்டாலிங் ஜெயா: 1எம்டிபி விவகாரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பே எதிர்கொண்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமடைந்திருக்காது என்று கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தணிக்கை செய்யப்பட்ட கணக்கு வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு 1எம்டிபி விவகாரத்தை 2010ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தாம் முன்வைத்ததாக திரு அன்வார் கூறினார்.

அதற்காக அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கம் தம்மைக் கடுமையாக தாக்கியதாக அவர் குறிப்பிட்டார். அதனால்தான் தமக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டதாகவும் 2015ஆம் ஆண்டில் தாம் சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும் திரு அன்வார் கூறினார்.

"நாங்கள் சாமானியர்களுடன் மோதவில்லை. இவர்கள் மிகுந்த அறிவாளிகள். ஆனால் தலைவர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்ளும்போது தோல்வியின் பிடியில் சிக்கிக்கொள்வர். அவர்கள் அதிக நாள் அதிகாரத்தில் இருக்கமாட்டார்கள். இது அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும்," என்றார் திரு அன்வார்.