அமெரிக்க ஆகாயப் படை தாக்குதல்: 13 ஐஎஸ் பயங்கரவாதிகள் பலி

அமெரிக்க ஆகாயப் படை தாக்குதல்: 13 ஐஎஸ் பயங்கரவாதிகள் பலி

1 mins read

நைரோபி: சோமாலியாவில் அமெரிக்க ஆகாயப் படை நடத்திய தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 13 பேர் மாண்டனர். சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க ஆகாயப் படை நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் மாண்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.

அதிபர் டோனல்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து சோமாலியாவில் அமெரிக்க ஆகாயப் படை தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சோமாலியாவில் மட்டும் 800க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றுவிட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது.