வலிமைமிக்க ஏவுகணைக்கு அடிபோடும் கிம் ஜோங் உன்

சோல்: ஏவுகணைகளின் வலிமை யை அதிகரிக்குமாறு தமது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்.

கடந்த சில நாட்களாக வடகொரியா ஏவுகணைகளைப் பாய்ச்சி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.

அவசரநிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று தமது ராணுவத்திடம் வலிறுத்தினார் கிம்.

நாட்டின் எல்லைப்பகுதிகளில் தற்காப்பை வலுப்படுத்தவும் மேற்கு எல்லைப் பகுதியில் போர்க்காலப் பயிற்சிகளில் ஈடுபடவும் அவர் உத்தரவிட்டார்.

“நாட்டின் இறையாண்மையைக் காக்க வலிமைமிக்கப் படை பலம் அவசியம். அதுவே உண்மையான அமைதியையும் பாதுகாப்பையும் தரும்,” என்று கிம் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா பாய்ச்சியது.

அதையடுத்து, நேற்று முன்தினம் இரண்டு குறுந் தொலைவு ஏவுகணைகளை அது பாய்ச்சியது. 

அதுமட்டுமல்லாது, இம்மாதம் 4ஆம் தேதியன்று சிறுவகை ஏவுகணைகளை அது பாய்ச்சியது.

“முன்பைவிட தற்போது பாய்ச் சப்பட்டவை சிறிய ஏவுகணைகள். அவை குறுந்தொலைவு ஏவு கணைகள். 

“இந்த ஏவுகணைகள் பாய்ச்சப் பட்டது குறித்து எவருக்கும் மகிழ்ச்சி  இல்லை. 

“வடகொரியாவின் இந்தச் செயலை நாங்கள் உன்னிப்பாகக்  கவனித்து வருகிறோம்,” என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

அதிபர் டிரம்ப்புக்கும் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான இரண்டாவது உச்சநிலை சந்திப்பு கடந்த பிப்ரவரி மாதம் வியட்னாம் தலைநகர் ஹனோயில் நடை பெற்றது.

அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வட கொரியா அண்மையில் ஏவுகணை களைப் பாய்ச்சியிருக்கலாம் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்தார்.

இதற்கிடையே, நிலக்கரியைச் சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற வடகொரியக் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.

பாய்ச்சப்பட்ட ஏவுகணைகள் பற்றி வடகொரியா தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.  

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon