தன்னைச் சாப்பிட முயன்றவரைப் பதம்பார்த்த கணவாய்

தன்னைச் சாப்பிட முயன்றவரைப் பதம்பார்த்த கணவாய்

1 mins read
3663bf59-9e61-4646-b5fd-13e5c08fa8eb
-

பெரிய ஆக்டோபஸ் எனப்படும் கணவாய் ஒன்றை சீனாவில் உயிருடன் சாப்பிட முயன்ற இணையத்தள நிகழ்ச்சி படைப் பாளர் ஒருவரை அந்த கணவாய் காயப்படுத்தியதைக் காட்டும் காணொளி இணையத்தில் வெகுவாகப் பரவி வருகிறது.

'வெய்போ' எனும் சமூக ஊடகத்தில் இந்த வாரம் பகிரப் பட்ட அந்தக் காணொளியில் தன்னை சாப்பிட முயன்ற அந்தப் பெண்ணின் வாய், மூக்கு, கண், கன்னம் போன்ற பகுதிகளை கணவாய் அழுந்தப் பற்றிக் கொண்டது.

தொடக்கத்தில் கணவாய் தன்னை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டதைப் பற்றிப் பேசும் அந்தப் பெண், தாம் பிரச்சினையில் சிக்கியிருப்பதைச் சில வினாடி களுக்குள் புரிந்துகொண்டு அதனிடமிருந்து விடுபட முயற்சி செய்வதும் அவரது முகத்தில் உள்ள தோலை அழுத்தமாகப் பற்றிக்கொண்ட கணவாய் அவ ரது தோலை இழுப்பதும் காணொ ளியில் பதிவாகியுள்ளன. ஒரு கட்டத்தில் அவரது இடது கண் ணுக்கு அருகிலுள்ள தோல் கிழிந்துவிடுமோ என்ற அச்சம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிறது.

மிகுந்த விசையுடன் கணவாயை முகத்திலிருந்து அப்புறப்படுத்திய அந்தப் பெண், பின்னர் காயத்தைக் காட்டி அழுவதும் தெரிகிறது. உயிருள்ள கணவாயைப் பலர் சாப்பிட்டாலும் சாகச முயற்சியில் ஈடுபடுபவர்களே அதை முழுதாக விழுங்குவர் என்று கூறப்படுகிறது.

கணவாயை உயிருடன் சாப்பிட முற்பட்டவர் அதனிடம் சிக்கிக் காயம்பட நேர்ந்தது. படம்: யூடியூப் காணொளி