பள்ளிவாசல்களுக்கு இலங்கை அரசாங்கம் புதிய உத்தரவு

பள்ளிவாசல்களுக்கு இலங்கை அரசாங்கம் புதிய உத்தரவு

2 mins read

இலங்கையில் ஈஸ்டர் தின வழி பாட்டின்போது 258 உயிர்களைப் பலிவாங்கிய தற்கொலைத் தாக்கு தல் சம்பவத்தைத் தொடர்ந்து அந் நாட்டு அரசாங்கம் பயங்கரவாதத் திற்கு எதிரான நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் முஸ்லிம் சமய, கலாசார விவகார அமைச்சு ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.

சமயத் தீவிரவாதப் பிரசாரத் திற்கு பள்ளிவாசல்கள் இடம் தரக் கூடாது என்பதே அந்த உத்தரவு.

"நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, தீவிரவாத, வெறுப்பைத் தூண்டும் வகை யிலான எந்த ஒரு பிரசாரத்தையும் நடத்தும், ஊக்குவிக்கும் கூட்டத் திற்கு அனுமதி வழங்கவேண்டாம் என பள்ளிவாசல்களின் அனைத்து அறங்காவலர்களையும் அமைச்சு கேட்டுக்கொள்கிறது," என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், பள்ளிவாசல்கள் தங்களது வளாகத்தில் தொழுகை யின்போது நிகழ்த்தப்படும் 'குத்பா' சமய உரையின் நகல்களை சமர்ப் பிக்குமாறும் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் தேதி மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஆடம்பர ஹோட்டல்களிலும் நடத் தப்பட்ட தாக்குதல்களின் தொடர் பில் இதுவரை 56 பேரை பாது காப்புப் படையினர் கைது செய்துள் ளனர்.

மேலும், 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சமய போதகர்களை இலங்கை வெளியேற்றிவிட்டது.

இதற்கிடையே, சட்டவிரோத வெடிப்பொருட்களை வைத்திருப் போர் அதுபற்றிய விவரங்களை அருகிலுள்ள காவல் நிலையங் களில் நாளை மறுதினம் செவ் வாய்க்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என போலிஸ் புதிய உத் தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதற்கான மூன்று நாள் அவகாசம் நேற்றுக் காலை முதல் தொடங்கிவிட்டதாக போலிசின் அறிக்கை சுட்டியது.