வர்த்தக உடன்பாடு காண்பதில்  நீடிக்கும் மூன்று பிரச்சினைகள் 

வா‌ஷிங்டன்: அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக உடன்பாடு காண்பதில் இன்னும் மூன்று பிரச்சினைகள் இருப்பதாக சீன துணைப் பிரதமர் லுய் ஹி கூறியுள்ளார்.

வர்த்தக உடன்பாடு காண்பதற்கு தடையாக இருக்கும் அந்தப் பிரச்சினைகள் குறித்து பெய்ஜிங்கில் அடுத்து நடக்க விருக்கும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார். அந்த சந்திப்பில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

வா‌ஷிங்டனில் அமெரிக்கப் பேராளர்களுடன் சீன துணைப் பிரதமர் லுய் ஹி நடத்திய மூன்று நாள் பேச்சுவார்த்தை உடன்பாடு எதுவும் காணப்படாமல் முடிவுற்றது. இருப்பினும் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சு தொடரும் என்று திரு லுய் ஹி கூறினார்.

அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் மனுசின் மற்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் லைட்ஹிசர் ஆகியோ ருடன் திரு லுய் ஹி பேச்சு நடத்தினார். சீனப் பொருட் களுக்கு அமெரிக்கா விதித்துள்ள அனைத்து கூடுதல் வரிகளையும் நீக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு அமெரிக்கா இணங்க வில்லை. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதை சீனா வலுவாக எதிர்ப்பதாகவும் திரு லுய் கூறினார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கெனவே வரி விதித்துள்ளது.

வரி விதிக்கப்படாமல் இருக்கும் 300 பில்லியன் அமெரிக்க டாலர் (S$408 பில்லியன்) மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு வரியை உயர்த்த அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!