கொலம்பியாவில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் நால்வர் உயிரிழந்ததாகவும் 29 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். காயம் அடைந்தவர்களில் 17 பேர் சிறுவர்கள் என்று கூறப்படுகிறது. அந்த தொழிற்சாலையில் வெடிப்பு ஏற்பட்டபோது பல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய விசாரணை நடந்துவருகிறது. படம்: இபிஏ
கொலம்பியா வெடிப்பு சம்பவத்தில் நால்வர் பலி
1 mins read
படம்: இபிஏ -

