ஈரானுடன் பதற்றம்: வளைகுடா பகுதிக்கு  போர்க்கப்பலை அனுப்பியது அமெரிக்கா 

வா‌ஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளதால் அந்நாட்டுடன் பதற்றம் நீடிக்கும் வேளையில் அமெரிக்கா ஒரு போர்க் கப்பலையும் தற்காப்பு ஏவுகணை சாதனங்களையும் மத்திய கிழக்குப் பகுதிக்கு அனுப்பி யுள்ளது. அமெரிக்க போர்க் கப்பல் கத்தாரில் உள்ள ராணுவத் தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ள தாக அமெரிக்க தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடிய மிரட்டல் இருப்பதால் தற்காப்பு ஏவுகணை சாதனங்களையும் போர்க் கப்பலையும் அப்பகுதிக்கு அனுப்பியிருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.

ஈரான் மிரட்டல் குறித்து அமெரிக்கா விவரமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்கப் படைகளைத் தாக்க ஈரான் திட்டமிட்டிருப்பதாகக் கூறப் படுவதை ஈரான் மறுத்துள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் ஏவுகணை சாதனங்களையும் போர்க் கப்பலையும் குவிக்கும் அமெரிக்காவின் செயல் ஈரானை அச்சுறுத்தும் செயல் என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

ஈரானுடன் மோதுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் இந்த வட்டாரத்தில் உள்ள அமெரிக்கப் படைகளை தற்காக்க அமெரிக்கா ஆயத்த மாகிறது என்றும் அமெரிக்க தற்காப்பு அமைச்சு கூறியது.

2015ஆம் ஆண்டு ஈரானுடன் அனைத்துலக நாடுகள் செய்து கொண்ட உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக சென்ற ஆண்டு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார்.

திரு டிரம்ப்பின் அந்த முடிவுக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் ஈரான் மீது புதிய தடைகளையும் அவர் விதித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!