இந்தோனீசிய சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓட்டம்  

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சியக் சிறைச்சாலையில் நேற்று காலை மூண்ட கலவரத்தைத் தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக இந்தோனீசியப் போலிசார் தெரி வித்துள்ளனர்.

அந்த சிறைச்சாலையில் மூண்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு தீ மூண்டதாகவும் அந்த சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கைதிகள் பலர் அங்கிருந்து தப்பியோடி விட்டதாகவும் போலிஸ் வட்டாரங் கள் தெரிவித்தன.

தப்பியோடிய கைதிகளைக் கண்டுபிடிக்க போலிசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருப் பதாக அதிகாரிகள் கூறினர்.

இதுவரை 115 கைதிகள் போலிசாரிடம் பிடிபட்டுள்ளதாக ரியாவ் மாநில போலிஸ் படைத் தலைவர் விடோடோ இகோ பிரிஹாஸ்டோபோ கூறினார்.

தப்பியோடிய மற்ற கைதிகளைப் பிடிக்க ராணுவத்தினரின் உதவி யுடன் போலிசார் சுற்று வட்டாரப் பகுதிகளில் தேடி வருவதாகவும் பிரிஹாஸ்டோபோ தெரிவித்தார்.

போலிசாருக்கு பொதுமக்களும் உதவி வருவதாக அவர் சொன் னார்.

அந்த சிறைச்சாலையில் போதைப்பொருள் பயன்படுத்திய கைதிகள் பலரை சிறைச்சாலை காவலர்கள் அடித்து துன்புறுத்தி யதைத் தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டதாக போலிசார் கூறினர். அந்தக் கலவரத்தின் போது மூன்று கைதிகளுக்கு கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டதாகவும் போலிஸ்காரர் ஒருவரும் கலவரத்தில் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் சுகாதார அதிகாரி ஒருவர் கூறினார். இந்தோனீசிய சிறைச் சாலைகளில் கலவரம் ஏற்படுவதும் அங்கிருந்து கைதிகள் தப்பிச் செல்வதும் அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று என்று கூறப்படுகிறது. 2013ஆம் ஆண்டு இந்தோனீ சியாவில் உள்ள ஒரு சிறைச்சாலையில் கலவரம் மூண்டபோது 150 கைதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!