இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட் டலுக்குள் புகுந்து சனிக்கிழமை சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் மூவரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள கவுதார் நகரில் கட்டப்பட்டு வரும் துறைமுகத்திற்கு அருகே உள்ள ஸவர் பெர்ல் ஹோட்டலுக் குள் அதிரடியாக நுழைந்த துப்பாக்கிக்காரர்கள் அங்கிருந்த வர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஹோட்டல் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அந்த துப்பாக்கிக்காரர்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்திய ஹோட்டல் காவலாளியை அந்த பயங்கரவாதி கள் சுட்டுக்கொன்றதாகவும் அப் பேச்சாளர் சொன்னார்.
பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் எனும் பிரிவினைவாதக் குழு அத்தாக்குதலுக்கு பொறுப் பேற்றுக்கொண்டுள்ளது.
பலுசிஸ்தானில் சீனா கட்டி வரும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான துறைமுகத் திட்டத் திற்கு பாகிஸ்தானில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அங்குள்ள ஹோட்டல் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது.
சீனர்களையும் இதர முதலீட் டாளர்களையும் குறிவைத்து அத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த பிரிவினைவாதக் குழு தெரிவித்துள்ளது. சீனாவிலும் பாகிஸ்தானிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாகவும் அக்குழு அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை ஹோட்டல் தாக்கப் பட்டபோது அந்த ஹோட்டலில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என்றும் நோன்பு மாதம் என்பதால் பணியாளர்கள் சிலர் மட்டுமே அங்கு இருந்ததாகவும் ஹோட்டல் பேச்சாளர் கூறினார்.
இந்நிலையில் அந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பயங்கரவாதிகளின் இத்தகைய செயல்கள் நாட்டின் பொருளியலை பாதிக்கும் என்று கூறினார்.

