பிரான்சில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் பாரிஸ் நகரில் சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3,000 பேர் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பாரிஸ் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். பிரெஞ்சு அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வாரத் தொடக்கத்தில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்சில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலிசார் மோதல்
1 mins read
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சனிக்கிழமை போராட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தனர். அரசாங்க கட்டடத்திற்கு வெளியே போடப்பட்டிருந்த தடுப்புக் கம்பியை ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்ற முயன்றபோது போலிசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. படம்: ஏஎஃப்பி -

