சுடச் சுடச் செய்திகள்

சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வா‌ஷிங்டன்: அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடு காண சீனா விரைந்து செயல்படுவது அந் நாட்டுக்கு மிகவும் நல்லது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

இந்த வாய்ப்பை தவறவிட்டால் மோசமான நிபந்தனைகளை சீனா எதிர்நோக்க நேரிடும் என்று திரு டிரம்ப் எச்சரித்தார். 

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள  அதிபர் தேர்தலில் தான் மீண்டும் வெற்றி பெற்று அதிபராகப் போவதாக முன்னுரைத்த திரு டிரம்ப்,  அப்போது வர்த்தக உடன்பாடு காண்பதற்கான நிபந்தனைகள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என்று கூறினார்.

உடன்பாடு காண்பது தொடர்பில் இதுவரை நடந்த  பேச்சுவார்த்தைகள் தங்களுக்கு சாதகமாக இல்லை என்று சீனா கருதலாம். இதனால் அடுத்த அமெரிக்கத் தேர்தலுக்காக சீனா  காத்திருக்கக்கூடும் என்றும் திரு டிரம்ப் கூறினார்.

“அடுத்து வரும் தேர்தலில் நானே வெற்றி பெறுவேன் என்பது சீனாவுக்குத் தெரியும்,” என்றும் திரு டிரம்ப் கூறினார்.

வா‌ஷிங்டனில் அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீபன் மனுசின் மற்றும் வர்த்தகப் பேராளர் ராபர்ட் லைட்ஹிசர் ஆகியோருடன் சீன துணைப் பிரதமர் லுய் ஹி நடத்திய பேச்சுவார்த்தை எவ்வித   உடன்பாடும் காணப்படாமல் முடிவுற்றதை அடுத்து திரு டிரம்ப்  இவ்வாறு கூறினார்.  

அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிக்கட்டணங் களை உயர்த்தி வரும் நிலையைஇல்  வர்த்தக உடன்பாடு காண்பது தொடர்பில் அமெரிக்காவும் சீனாவும் அண்மையில் பல தடவை பேச்சுவார்த்தை நடத்தின.   

அவ்விரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் வர்த்தகப் பூசல் முடிவுக்கு வரவேண்டும் என்றால் உடனடியாக இரு நாடுகளும் வர்த்தக உடன்பாடு காண்பது அவசியம் என்று உலக நாடுகள் கருதுகின்றன.

இந்நிலையில் உடன்பாடு காண்பது தொடர்பில் அமெரிக்கா வும் சீனாவும் இதுவரை நடத்திய  பேச்சுவார்த்தைகளில் பல பிரச் சினைகளுக்கு தீர்வு காணப்பட்ட போதிலும் இன்னும் மூன்று   பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் படவில்லை என்று  சீன துணைப் பிரதமர் லுய் ஹி கூறியுள்ளார்.

சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள அனைத்து கூடுதல் வரிகளும் நீக்கப்பட வேண்டும் என்று சீனா  வலியுறுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா இணங்கவில்லை.

வர்த்தக உடன்பாடு இரு நாடுகளுக்கும் பலன் தருவதாக இருக்க வேண்டும் என்றும் சீனா    வலியுறுத்தி வருகிறது. 

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 300 பில்லியன் அமெரிக்க டாலர் (S$ 408 பில்லியன்) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கவிருக்கும்  கூடுதல் வரி பற்றிய விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று அமெரிக்க வர்த்தகப் பேராளர் ராபர்ட் லைட்ஹிசர் கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon