உலகின் செல்வாக்குமிக்க மனிதராக டாக்டர் மகாதீர்

உலகின் செல்வாக்குமிக்க மனிதராக டாக்டர் மகாதீர்

1 mins read
5660f48f-68ac-4752-a85d-7808cbbdbe4c
மலேசிய பிரதமர் மகாதீர். படம்: EPA-EFE -

மலேசியாவின் ஏழாவது பிரதமராகப் பதவி எற்ற ஒரே ஆண் டில் உலகின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களில் ஒருவராக டாக்டர் மகாதீர் அங்கீகரிக்கப் பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் இவ்வாண்டின் தலை சிறந்த முஸ்லிம் என்று அவர் பெயர் குறிக்கப்பட்டார். உலக ளவில் செல்வாக்குடன் திகழும் 500 முஸ்லிம்களைப் பட்டிய லிடும் சஞ்சிகை இந்தத் தேர்வை செய்திருந்தது.

ஏப்ரல் மாதம் அனைத்துலக செய்தி சஞ்சிகையான டைம் உலகளவில் இவ்வாண்டில் செல்வாக்கு மிகுந்த தனிநபர் களின் பட்டியலில் டாக்டர் மகா தீரைச் சேர்த்தது. தொடர்ந்து இம்மாதத் தொடக்கத்தில் உல கின் 50 மாபெரும் தலைவர்கள் என்னும் பட்டியலில் திரு மகா தீருக்கு 47வது இடத்தைத் தந்தது 'ஃபார்சூன் டாட் காம்' என்னும் அனைத்துலக இணைய வாசல். அரசியல் கூட்டணியை திறமையுடன் வழிநடத்திய அசா தாரணமான மனிதர் என்று இந்த மூன்று வெளியீடுகளும் குறிப்பிட்டுள்ளதாக 'பெர்னாமா' இணையச் செய்தி தெரிவித்து உள்ளது.