இலங்கை: வன்முறைச் சம்பவங்களால் சமூக ஊடகங்கள் முடக்கம்

இலங்கை: வன்முறைச் சம்பவங்களால் சமூக ஊடகங்கள் முடக்கம்

1 mins read
58814cad-9c2b-4273-9828-76b833beaaa2
-

சமூக ஊடகங்கள் சிலவற்றைத் தற்காலிகமாக முடக்குவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு நிகழும் வன்முறைச் சம்பவங்களால் 'ஃபேஸ்புக்', 'வாட்சப்' உள்ளிட்ட சமூக ஊடகச் செயலிகளின் செயல்பாட்டை இலங்கை அரசாங்கம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட சில இடங்களில் பல்வேறு நபர்கள் கற்களை வீசி எறிந்ததாகக் கூறப்படுகிறது. மேற்குக் கரையிலுள்ள சில்ஹோ என்ற நகரில், ஃபேஸ்புக்கில் மூண்ட மோதல் ஒன்றின் தொடர்பில் ஓர் ஆடவர் தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்நகரில் போலிசார் இன்று அதிகாலை வரை ஊரடங்கு விதித்திருந்தனர்.