இந்திய மனைவியை 59 முறை கத்தியால் குத்திய பிரிட்டிஷ் ஆடவருக்குத் தண்டனை

தனது மனைவியை 59 முறை கத்தியால் குத்திக் கொன்ற பிரிட்டிஷ் ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்தியாவைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கும் ஆடவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ரத்தக் களறியில் முடிந்ததாக அந்நாட்டு போலிசார் கூறினர்.

47 வயது லோரன்ஸ் பிராண்ட், இரண்டு சமையலறை கத்திகளைப் பயன்படுத்தி தன் மனைவி 41 வயது ஏஞ்சலா மிட்டாலைக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஏஞ்சலா வீட்டிலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக பிராண்ட், ஏஞ்சலாவைத் துன்புறத்தி வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.