டிரம்ப்: சீனாவுக்கு எதிரான நடவடிக்கை சரியானதே

வா‌ஷிங்டன்: அமெரிக்காவும் சீனா வும் வர்த்தகப் போரில் சிக்கியுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் சீனாவுட னான மோதலில் அமெரிக்கா சரியான நிலையைத்தான் எடுத் துள்ளதாகக் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையி லான வர்த்தகப் போர் முற்றிவரும் வேளையில் சீனாவின் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு எதிராக அமெரிக்கா தனது வரிவிதிப்பை இரண்டு மடங்குக்கும் அதிகமாக கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் கருத்துக் கூறிய அமெரிக்க அதிபரின் முக்கிய பொருளியல் ஆலோசக ரான லேரி குட்லோ, இதனால் இரு நாடுகளுமே சிரமப்படும் என்று தெரிவித்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

எனினும், தமது ஆலோசகரின் இந்தக் கருத்தை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

"சீனா குறித்து அமெரிக்கா சரியான நிலையைத்தான் எடுத் துள்ளது. சீனா ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறித்து மீண்டும் மறு ஒப்பந்தம் காண முயன்றதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

"வரி விதிப்பினால் அமெரிக்கா வுக்கு பல பில்லியன் கணக்கிலான டாலர்கள் வந்து சேர்கின்றன. அந்தப் பொருட்களை வாங்குவோர் ஒன்று அதை அமெரிக்காவில் தயாரிக்கலாம், அது நான் விரும் பும் ஒன்று, இல்லையேல் அவற்றை வரி விதிக்கப்படாத நாடுகளி லிருந்து வாங்கலாம்," என்று தமது டுவிட்டர் பதிவில் விளக்கினார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா 200 பில்லியன் பெறு மானமுள்ள மீன், மாதர் கைப் பைகள், ஆடைகள், காலணிகள் உட்பட சீனப் பொருட்கள், மீதான வரியை 10 விழுக்காட்டி லிருந்து 25 விழுக்காடாக உயர்த்தியது. அத்துடன், அமெரிக்காவின் வர்த்தக பிரிதிநிதித்துவ அலு வலகம் கிட்டத்தட்ட 300 பில்லியன் பெறுமானமுள்ள மீதமுள்ள சீனப் பொருட்கள் மீது வரி விதிப்பதற் கான நடைமுறையை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பொருட்களுக்கான வரியை இவற்றை இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் கொடுக்க நேரிடும்.

சீனப் பொருட்களுக்கு எதிரான வரி விதிப்பை 10 விழுக்காட்டி லிருந்து 25 விழுக்காடாக அதி கரிப்பது அமெரிக்க வர்த்தகங் களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். வரி விதிப்பு 10 விழுக்காடாக இருந்தால் அதை நிறுவனங்கள் ஏற்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மாறாக 25 விழுக்காடு வரி விதிப்பை நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ள சிரமப்படும் என்றும் இதனால் இந்தக் கூடுதல் வரி விதிப்பை அந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தலையில் கட்டிவிடும் என்றும் பொருளியல் நிபுணர்கள் கருத்துக் கூறுகின் றனர்.

இந்நிலையில், இந்த விவகாரத் தில் கருத்துக் கூறிய சீனா, அமெரிக்க முடிவு வருத்தமளிப்ப தாகவும் இதற்கு தகுந்த பதில் நடவடிக்கைகளை எடுக்கப்போவ தாகவும் கூறியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!