அசாஞ்சுக்கு எதிராக மீண்டும் விசாரணை

அசாஞ்சுக்கு எதிராக மீண்டும் விசாரணை

1 mins read

ஸ்டோக்ஹம்: விக்கிலிக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று சுவீடனின் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அசாஞ்சை பிரிட்டனிலிருந்து சுவீடனுக்குக் கொண்டு வரும் வழிவகைகளை சுவீடன் ஆராய்ந்து வருவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் இவா=மேரி பெர்சன் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.

கிட்டத்தட்ட ஏழாண்டு களுக்கு தூதரகம் ஒன்றில் தஞ்சமடைந்த அசாஞ், கடந்த மாதம் பிரிட்டனில் கைது செய்யப்பட்டார்.

பல ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளதாக அசாஞ் மீது அமெரிக்கா குற்றம் சுமத்தி உள்ளது.

அசாஞ்சுக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கு ஒன்று 2017ஆம் ஆண்டில் விசாரிக்கப்பட்டது.

ஆனால் அவர் லண்டனில் உள்ள எக்குவாடோர் தூத ரகத்தில் தஞ்சம் அடைந்ததும் அந்த வழக்கு விசாரணை கைவிடப்பட்டதாக திருவாட்டி பெர்சன் கூறினார்.