59 கத்திக்குத்துகள்: இந்திய மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

லண்டன்: தமது மனைவியைக் கொன்ற கணவருக்கு இங்கி லாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 41 வயது ஏஞ்செலா மிட்டலை அவரது கணவரான 47 வயது லாரன்ஸ் பிரேண்ட் கத்தியால் குத்திக்கொன்றார்.

கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று கணவன்=மனை விக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ் தனது மனைவியை 59 முறை கத்தியால் குத்திக்கொன்றார்.  படுக்கை அறையில் மனைவியை ஒரு கத்தியால் லாரன்ஸ்  சரமாரி யாக குத்தியபோது கத்தி உடைந் துள்ளது. உடனே அவர் சமையலறைக்குச் சென்று வே றொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் தொடர்ந்து குத்தி கொலை செய்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

லாரன்சுக்கு குறைந்தபட்சம் 16 ஆண்டு 8 மாதங்களுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon