துபாய்: ஐக்கிய அரபு சிற்றரசு களின் கடற்பகுதியில் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் நேற்று முன்தினம் சேதப்படுத்தப் பட்டன. இதை ஒரு நாசவேலை என்று சவூதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் கலித் அல் ஃபாலி சாடியுள்ளார்.
உலக நாடுகளுக்கு விநி யோகம் செய்யப்படும் எண் ணெய்க்கு மிரட்டல் ஏற்பட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது.
தாக்கப்பட்ட இரண்டு கப்பல் களில் ஒன்று, கச்சா எண்ணெய் யை ஏற்றிக்கொள்ள சவூதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பல் கச்சா எண் ணெய்யை ஏற்றிக்கொண்டு சவூதி அரசுக்குச் சொந்தமான அராம்கோ நிறுவனத்தின் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு அதை விநியோகம் செய்யவிருந்ததாக திரு ஃபாலி தெரிவித்தார்.
தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதுமட்டுமல்லாது, கடலில் எண்ணெய்க் கசிவும் ஏற்பட வில்லை.
ஆனால் இரண்டு கப்பல்களும் மிக மோசமான முறையில் சேதம் அடைந்திருப்பதாக திரு ஃபாலி கூறினார்.

