தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானில் கிட்டத்தட்ட பாதி மில்லியன் 'யூனிக்லோ', 'ஜியூ' கணக்குகள் ஊடுருவல்

1 mins read
1a5f25cb-659f-4372-b716-47f68a6f5a6f
-

ஆடைகளை விற்கும் யூனிக்லோ, ஜியூ ஆகியவற்றின் இணையக் கடைகளில் கணக்குகளை வைத்திருக்கும் பயனீட்டாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேரின் வங்கிக் கணக்குகள் ஊடுருவப் பட்டிருப்பதாக ஆசியாவின் ஆகப் பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான ஃபாஸ்ட் ரிட்டெய்லிங் கோ. தெரிவித்திருக்கிறது. ஜப்பானிலுள்ள தனது இணையக்கடைகளில் பதிவு செய்திருந்தோரில் குறைந்தது 460,000 பேரின் கணக்குகள் ஊடுருவப்பட்டதாக அந்நிறுவனம் தனது அறிக்கையில் திங்கட்கிழமை ( மே 13ஆம் தேதி) கூறியது.

பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், பொருட்களை வாங்கியதைக் காட்டும் குறிப்புகள், கடன்பற்று அட்டை எண்களின் சில பகுதிகள் உள்ளிட்டவற்றை ஊடுருவிகள் பெற்றிருக்கலாம் என்றது அந்நிறுவனம். ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை நடந்த இந்த ஊடுருவல்கள் குறித்த விசாரணை நடத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் 'ஃபாஸ்ட் ரிட்டெய்லிங்'கின் ஜப்பானியக் கடைகளில் மட்டும் நடந்ததாக அந்நிறுவனம் சொன்னது.