அமெரிக்கா, சீனா என்னும் உலகின் இரு பெரிய பொருளியல் நாடுகளிடையே வர்த்தகப் பதற் றம் தீவிரமடைந்திருக்கும் வேளை யில் அடுத்த மாதம் சீன அதி பரைச் சந்திக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள் ளார்.
அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்னும் கொள்கையின் ஒரு பகுதியாக தன்னைப் பேணித்தனத்தைத் தழுவி வரும் அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜூன் மாதக் கடைசியில் நிகழவிருக்கும் 20 நாடுகளின் உச்சநிலை மாநாட் டின்போது சீன அதிபர் ஸி ஜின் பிங்கைச் சந்திக்கப்போவதாகக் கூறியுள்ளார்.
"ஜப்பானில் நடக்கவிருக்கும் ஜி20 மாநாட்டில் நாங்கள் இரு வரும் சந்திக்கப்போகிறோம். அது மிகவும் பயனுள்ள ஒரு சந்திப்பாக அமையக்கூடும் என்று கருது கிறேன். ஏதேனும் ஒன்று நிகழ லாம்," என்று வெள்ளை மாளிகையில் திரு டிரம்ப் கூறினார்.
வர்த்தகப் பூசலை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து தமது நம்பிக்கையை வெளிப் படுத்த முனைந்த திரு டிரம்ப், "முயற்சிகள் வெற்றி பெற்றனவா இல்லையா என்பதை இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங் களில் தெரியப்படுத்துவேன்.
"இருப்பினும் நல்லதொரு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக் கையில் உள்ளேன்," என்றார்.
முன்னதாக, சீனப் பொருட் களின் இறக்குமதிக்கு 200 பில் லியன் டாலர் (S$274 பில்லியன்) வரி உயர்வை அறிவித்த அமெரிக் காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 5,000க்கு மேற்பட்ட அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா வரிவிதிப்பை அறிவித்தது. ஜூன் 1 முதல் 5 விழுக்காடு முதல் 25 விழுக்காடு வரையில் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அது தெரிவித்திருந்தது.
இருப்பினும், அமெரிக்கா விடாப்பிடியாக சீன இறக்குமதிப் பொருட்களுக்கு மேலும் 300 பில்லியன் டாலர் வரி உயர்வுக் கான வேலைகளில் தீவிரமாக உள்ளது.
இதுகுறித்த பொது கலந் தாய்வுக் கூட்டம் ஒன்றை அடுத்த மாதம் நடத்த இருப்பதாக அமெ ரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அடுத்தகட்ட வரி உயர்வில் கைபேசி, மடிக்கணினி போன்ற வை உள்ளடக்கப்படும் என்றும் மருந்துப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும் அந்த அலுவலகம் குறிப்பிட்டது.

