இலங்கையில் கலவரம், படுகொலை, கொந்தளிப்பு

இலங்கையில் ஈஸ்டர் தின தாக்கு தலில் தொடங்கிய அமைதி யின்மை இன்றளவும் நீடித்து வரு கிறது. தலைநகர் கொழும்பின் வடக்கே மூன்று மாவட்டங்களில் கடும் பதற்றம் நிலவுகிறது. முஸ்லிம் ஆடவர் ஒருவர் கும்பல் ஒன்றால் வெட்டிக் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி களில் கொந்தளிப்பு நிலவுகிறது. 

அதனைத் தொடர்ந்து சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் திங்கள் இரவு முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய கலவரம் பல பகுதிகளுக்கு பரவி யதைத் தொடர்ந்து அந்த 45 வயது ஆடவரைக் கும்பல் கடுமை யாகத் தாக்கியது. பலத்த காயங் களுடன் புத்தளம் மாவட்ட மருத் துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்ட அவர், பின்னர் மாண்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் போலிஸ் தெரிவித்தது. 

“ஆடவர் தமது தச்சுப் பட்டறை யில் இருந்தபோது அவரைச் சுற்றிவளைத்த கும்பல் கூர்மை யான ஆயுதங்களால் தாக்கியது. இந்தக் கலவரத்தில் நிகழ்ந்திருக் கும் முதல் மரணம் இது,” என்று போலிசார் கூறினர்.

இதற்கிடையே, தொலைக்காட்சி யில் நாட்டு மக்களிடம் உரை யாற்றிய பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, அடையாளம் தெரியாத கும்பல்கள் வன்முறையை தூண்டி வருவதாகத் தெரிவித்தார். 

“வடமேற்கு மாநிலங்களில் இந்தக் கும்பல்கள் எராளமான சொத்துகளைச் சேதப்படுத்திவிட் டனர். போலிசும் பாதுகாப்புப் படையினரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தபோதி லும் நாட்டில் கொந்தளிப்பை ஏற் படுத்த இந்தக் கும்பல்கள் தொடர்ந்து முயன்று வருகின்றன,” என்று அவர் கூறினார்.

கடந்த மாதம் 21ஆம் தேதி மூன்று கிறிஸ்துவ தேவாலயங் களையும் மூன்று ஆடம்பர ஹோட் டல்களை யும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதில் 258 பேர் கொல் லப்பட்டனர்; 500 பேருக்கு மேல் காயமுற்றனர். இப்போது மூண்டி ருக்கும் கலவரம் இந்தத் தாக்குதல் தொடர்பான விசார ணைக்கு இடையூறாக அமைந்து விட்டது என்று திரு விக்ரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கலவரக்காரர் களை இரும்புக்கரம் கொண்டு போலிஸ் அடக்கும் என இலங்கை தலைமை போலிஸ் அதிகாரி சந்தனா விக்ரமரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். கலவரத்தைத் தூண்டுவோரை ஒடுக்க போலி சாருக்கு சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதாக மற் றொரு தொலைக்காட்சி உரையில் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஞாயிறு, திங் கள் இருநாட்களும் முஸ்லிம் களுக்குச் சொந்தமான கடைகள், வாகனங்கள், பள்ளிவாசல்கள் போன்றவற்றை கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கி, தீவைத்து சேதப்படுத்தியதைத் தொடர்ந்து வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வடமேற்கு மாகாண மக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. புனித ரமலான் நோன்பு காலத்தில் கல வரம் பரவியது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு தொடங்கி மறுநாள் வரை நீடித்த கலவரத்தின்போது தீ வைத்துக் கொளுத்தப்பட்ட கடைகள். படம்: இபிஏ