அன்வார் பிரதமரானாலும் மகாதீருக்கு முக்கிய பதவி

அன்வார் பிரதமரானாலும் மகாதீருக்கு முக்கிய பதவி

2 mins read
c445f158-fd9f-4608-b0de-e909618979ee
-

தலைமைத்துவ மாற்றத்துக்குப் பிறகும் நாட்டுக்காக பெரும் பங்காற்றி உள்ள டாக்டர் மகாதீர் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பார் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் பிரச்சினை ஏதும் இருப்பதாக எண்ணவில்லை என்றும் திரு அன்வார் கூறியுள்ளார்.

அவர் சிறையிலிருந்து வெளி யேறி ஓராண்டு நிறைவடைந் துள்ளது. பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்றால் அன்வாரிடம் ஆட்சியை ஒப்ப டைப்பதற்கு முன் ஈராண்டு களுக்கு டாக்டர் மகாதீர் பிரதம ராக இருப்பார் என்று கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

பதவியுரிமைத் திட்டத்தின் தொடர்பிலான டாக்டர் மகாதீரின் கடப்பாடு, விளக்கம் ஆகிய வற்றை வரவேற்பதாகக் கூறிய திரு அன்வார் மேலதிக விவரங் கள் தர மறுத்துவிட்டார்.

"தேதி, மற்ற விவரங்களை நாங்கள் இருவரும் நல்ல முறையில் விவாதித்துக் கொள் வோம்," என்றார் அவர்.

உள்ளூரிலும் வெளிநாடுக ளிலும் பழைய நண்பர்கள் அடித்தளத் தலைவர்கள், அரசு சாரா அமைப்பினர் ஆகியோரைச் சந்திப்பதில் தமது நேரத்தைச் செலவிடுவதாக திரு அன்வார் கூறினார்.

மலேசியாவின் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களதும், அவர்களுடைய குடும்பத்தினரதும் சொத்து மதிப்புகளை மலேசிய ஊழல் எதிர்ப்புக் குழுவிடம் சமர்ப்பிக் குமாறு பிரதமர் மகாதீர் கேட்டுக்கொண்டதைத் தாம் வரவேற்பதாகத் திரு அன்வார் குறிப்பிட்டார்.

அரசாங்கம் இதனை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறிய அவர், நாம் நமது முழு ஆதரவை வழங்கவேண்டும் என்றார்.

அமைச்சர்கள் வேலை நேரத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கு, அதற்கான நடைமுறைகள் வகுக் கப்பட வேண்டும் என்றார் அவர்.

அமைச்சர்கள் தேர்தல் பிர சாரத்தில் ஈடுபடுவதைக் கட்டுப் படுத்த வேண்டும் என மலேசியா வின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சி 2.0 தேர்தல் ஆணையத்திடம் நேற்று கோரிக்கை வைத்தது.

பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவக் கூட்டத்துக்குப் பிறகு திரு அன்வாரும் டாக்டர் மகாதீரும் செய்தியாளர்களிடம் பேசினர். படம்: பெர்னாமா