இன்ஸ்டகிராமில் வாக்கெடுப்பு நடத்தி உயிரைவிட்ட இளையர்

இன்ஸ்டகிராமில் வாக்கெடுப்பு நடத்தி உயிரைவிட்ட இளையர்

2 mins read

கோலாலம்பூர்: சமூக ஊடகத்தில் தன்னைப் பின்பற்றுபவர்களிடம் 'வாழ்வதா? சாவதா?' என்ற கேள்விகளுக்கு வாக்களிக்கக் கோரி, அதன் அடிப்படையில் ஓர் இளையர் உயிரை மாய்த்துக்கொண்டதன் தொடர்பில் விசாரணை நடத்து மாறு நேற்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

கிழக்கு மலேசியாவில் உள்ள சரவாக்கில் 16 வயதுப் பெண் ஒருவர் இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில், "உண்மையில் முக் கியமானது. D/L என்பதைத் தேர்ந்தெடுக்க எனக்கு உதவுங் கள்," என்று நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்ததாக போலிசார் தெரிவித்தனர். அந்தப் பதிவுக்கு சில மணி நேரத்துக்குப் பிறகு கட்டடம் ஒன்றின் கூரையிலிருந்து கீழே விழுந்து அவர் உயிரை மாய்த்துக்கொண்டதாக நேற்று ஊடகங்கள் தெரிவித்தன.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் 'D/L' என்பது "வாழ்வதா / சாவதா' என்பதைக் குறிப்பதாக போலிசில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவுக்குப் பதில் பதிவிட்ட 69 விழுக்காட்டினர் 'D'ஐத் தேர்ந்தெடுத்ததாகவும் போலிசார் கூறினர்.

வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ராம்கர்பால் சிங், அந்தப் பெண் இறப்புக்குக் காரணமான சூழல் குறித்து விசா ரணை மேற்கொள்ள அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளார். பதில் பதிவில் 'D' எனக் குறிப் பிட்டவர்கள் தற்கொலையைத் தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட லாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பெண்ணின் பதிவுக்குப் பதில் பதிவிட்டவர்களில் பெரும் பாலானோர் அவர் உயிரை மாய்த் துக்கொள்வதை ஊக்குவிக்க வில்லை என்றால் அவர் தற்போது உயிருடன் இருந்திருப்பாரா? நிபுணர்களிடம் ஆலோசனை பெறு மாறு சமூக ஊடகப் பயனாளர்கள் அறிவுறுத்தியிருந்தால் அதற்கு அந்தப் பெண் செவிசாய்த்திருப் பாரா?" என்றும் திரு ராம்கர்பால் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மலேசிய சட்டப்படி, 18 வயதுக்குட்பட்டவர்களைத் தற் கொலைக்குத் தூண்டுவோருக்கு மரண தண்டனையோ அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ விதிக்கப்படலாம்.

இதன் தொடர்பில் மலேசியா வின் இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் சையது சத்திக் சையது அப்துல் ரஹ்மானும் விசாரணை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இளை யர்களிடையே அதிகரித்துவரும் தற்கொலை விகிதம், மனநலப் பிரச்சினைகள் ஆகியவற்றைக் கடுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இதன் தொடர்பிலான ராய்ட்டர்சின் கேள்விகளுக்கு இன்ஸ்ட கிராம் உடனடியாகப் பதிலளிக்க வில்லை.