பெட்டாலிங் ஜெயா: அனைத்துலக அளவில் கள்ளக் குடியேறிகளைக் கடத்தி வந்த மூன்று மலேசியர்கள் உட்பட 11 பேர் கொண்ட கும்பல், மலேசிய போலிஸ் பிடியில் சிக்கி உள்ளது.
போலி கடப்பிதழ்களைப் பயன் படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற இரு பெண்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய் யப்பட்டனர். அவர்களில் ஒருவர் மலேசியர், மற்றொருவர் இலங்கை நாட்டவர். அதனை அடுத்து மேலும் மூன்று இலங்கை நாட்டவர் களும் ஒரு ஜெர்மானியரும் கைதாகினர். பின்னர், சிலாங்கூரில் மேலும் இரு மலேசியர்களும் மூன்று இலங்கை நாட்டவர்களும் பிடிபட்டனர்.
கும்பலில் ஐவர் மட்டும் பாது காப்புச் சட்டம், ஆள் கடத்தலுக்கு எதிரான சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.
மற்றவர்கள் குடிநுழைவுச் சட் டம் தொடர்பில் விசாரிக்கப்படு வதாக கூறப்பட்டது.
இக்கும்பல் சென்ற ஆண்டு முதல் இயங்கத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.
இலங்கை, மலேசியா, ஐரோப்பா ஆகியவற்றில் இயங்கி வரும் ஒரு தந்திரமான கும்பல் இது என்றும் போலிசாரால் கூறப்பட்டது.
இதற்கிடையே கள்ளத்தனமாக மலேசியாவுக்குள் வருவதற்கும் நாட்டைவிட்டு வெளியேறுவதற் கும் பலருக்குச் சுலபமாக இருப் பதாகக் கூறப்பட்டு வருகிறது.
கள்ளக் குடியேறிகள் தனித் தனியாக ஒரு குறிப்பிட்ட சந்திப்பு இடத்திற்குப் பயணம் செய்த பின் அங்கிருந்து படகு வழி தங்களின் பயணத்தைத் தொடர்கின்றனர்.
பின்னர் தாங்கள் அடைய வேண்டிய இடத்தை அடைந்து விடுவதாக சிலாங்கூர் கடல் துறை அமலாக்க அமைப்பின் துணை இயக்குநர் ஏஸநிஸாம் கூறினார்.
இதற்காக மீன்பிடி படகுகள் போன்றவை அதிகமாகப் பயன் படுத்தப்படுவதாகவும் அவர் குறிப் பிட்டார்.

