வாஷிங்டன்: 'வாட்ஸ்அப்' செயலி ஊடுருவல் சம்பவம் கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஓர் அரசாங்கத்தின் வேலையாக இருக்கலாம் என்று நேற்று முன்தினம் 'வாட்ஸ்அப்' நிறுவனம் தெரிவித்தது.
ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திய அரசாங்கம் இது என்பதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் மனித உரிமைக் குழுக்களைக் குறிவைத்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தில் ஓர் அங்கமான 'வாட்ஸ்அப்', இதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அமெரிக்க போலிசாரிடம் புகார் அளித்துள்ளது.
இதற்கிடையே 'வாட்ஸ்அப்' பயனாளர்கள் தங்களிடமுள்ள செயலியை மேம்படுத்தப்பட்ட பதிப்புக்குப் புதுப்பித்துக்கொள்ள நிறுவனம் கேட்டுக்கொண்டது. ஊடுருவல் தொடர்பில் நிறுவனம் தொடங்கியுள்ள விசாரணையில் செயலியின் பாதுகாப்புக் குறைபாட்டைக் கொண்டு குறிப்பிட்ட சில பயனாளர்களைக் குறிவைத்ததாக நம்பப்படுகிறது.

