நியூயார்க்: பிரபல பிரெஞ்சு ஓவியர் ஒஸ்கர் க்ளோட் மோனேயின் ஓவியம் நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் $110.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (S$151.5 மி.) விற்பனை ஆனது. இதுவரை நடந்துள்ள ஏலங்களில் கண்டிராத அளவுக்கு அதிக விலையில் விற்கப்பட்டுள்ள ஒன்றாக இந்த ஓவியம் விளங்குகிறது.
1890க்கும் 1891க்கும் இடைப்பட்ட நாட்களில் மோனே வரைந்த ஓவியத் தொகுப்பில் மொத்தம் 25 ஓவியங்கள். ஒரே காட்சியைக் கொண்டு, ஒளி அம்சத்தையும் சூழலையும் மட்டும் நேரத்திற்கும் பருவ காலத்திற்கும் வானிலைக்கும் ஏற்ப மாற்றி ஒவ்வோர் ஓவியத்தையும் மோனே வேறுபடுத்திக் காட்டினார். படம்: ஏஎஃப்பி

