நேரடி ஒளிபரப்பைக் கட்டுப்படுத்துகிறது ஃபேஸ்புக்

சான் ஃபிரான்சிஸ்கோ: இணையம் வழி வன்முறை பரவுவதைக் கட் டுப்படுத்த ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் அதன் நேரடி ஒளிபரப்பு அம்சம் தொடர்பான விதிகளைக் கடுமை யாக்குவதாக நேற்று முன்தினம் கூறியது.

அண்மையில் நேர்ந்த கிறைஸ்ட் சர்ச் அசம்பாவிதத்தில் துப்பாக்கி ஏந்திய ஒருவன் பள்ளிவாசல்களில் இருந்த 51 பேரைச் சுட்டுக்கொன் றதை ஃபேஸ்புக் வழி நேரடியாக ஒளிபரப்பினான். இதன் தொடர் பில் பயங்கரவாதத்தை எதிர்த் துத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. நிறுவன விதிகளைப் பயனாளர் ஃபேஸ்புக் தளத்தில் எங்காவது மீறி அதன் தொடர் பில் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கினால் நேரடியாக ஒளிபரப்ப அவருக்கு வழங்கப் படும் அனுமதி தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும்.

இணைய வன்முறையை முறியடிப்பதில் ஃபேஸ்புக் இந்த  முதல் படியை எடுத்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon