சீன அதிபர் ஸி அனைவருக்காகவும் சீனா

சீன அதிபர் ஸி அனைவருக்காகவும் சீனா

2 mins read

பெய்ஜிங்: வெளிப்படையான போக் கிற்கான சிறந்த வரலாற்றைக் கொண்ட சீனா, மேலும் வெளிப் படையாக நடத்துகொள்ளும் என்று அதிபர் ஸி ஜின்பிங் நேற்று நடைபெற்ற ஆசிய நாகரிகங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் மாநாட்டின்போது தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் கடந்த வாரத்திலிருந்து மீண்டும் முற்றியுள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறி இருநாட்டுப் பொருட்கள் மீது வரி விதிப்புப் போரைத் தொடுத்து வருகின்றன.

ஆனால் இவ்வர்த்தக மோதல் குறித்து நேரடியாக எந்த ஒரு கருத்தையும் கூறாத அதிபர் ஸி, மிரட்டல் அளிக்காமல் அனைவருக்காகவும் இயங்கும் நாடு சீனா என்ற கருத்தை முன்வைத்தார்.

அதிபர் ஸி இக்கருத்தைக் கூறுவதற்கு முன்தான் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை வர்த் தகங்களும் தொழில்துறை உற்பத்திக்கான வளர்ச்சியும் மெதுவடைந் துள்ளதாக சீன அரசு அறிவித்து இருந்தது.

புத்த சமயம், மார்க்ஸிசம், இஸ்லாம் போன்ற பல்வேறு கலாசாரங்களை ஏற்றுக்கொண்டு அவற்றிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு வெளிப்படையான போக்கை சீன நாகரிகம் கொண்டிருப்பதாக அதிபர் ஸி மாநாட்டில் கூறினார்.

"இன்றைய சீனா ஆசியாவுக்கும் உலகத்திற்கும் உரிய சீனா. எதிர் காலத்தில் சீனா மேலும் ஒரு வெளிப்படையான நிலைப்பாட்டின் அடிப்படையில் உலகத்தை ஏற்றுக் கொள்ளும்," என்றார் அவர்.

எந்த ஒரு நாடும் தனித்து இயங்க முடியாது என்று அதிபர் ஸி கூறியிருப்பது 'அமெரிக்கா முதலில்' என்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கொள்கைக்கு மறைமுகமான பதிலடி எனக் கருதப்படுகிறது.

இதன் தொடர்பில் சீனாவுட னான வர்த்தகப் போரை 'சிறு சச்சரவு' என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் இன்னும் தோல்வி அடையவில்லை என்று கூறியுள்ளார்.

வர்த்தகத்தை சீனா கையாளும் முறை பல ஆண்டுகளாக நியாயம் அற்றதாக இருந்து வந்துள்ளது என்றும் அதற்குத் தண்டனையாக சீனாவிலிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்கள் மீதும் வரி விதிக்கப்படும் என்றும் பெரும் அளவில் சீனாவுக்குத் தம் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார் திரு டிரம்ப்.

ஆனால் பெய்ஜிங்குடன் கூடிய விரைவில் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படும் என்று இப்போது சற்று இளகிய தொனியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் அதிபர் டிரம்ப்.