இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக வீசும் கலவர அலைக்கு பெளத்த அடிப்படைவாதக் குழுக்கள் காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈஸ்டர் தினத்தில் அந்நாட்டை உலுக்கிய குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதை அடுத்து பள்ளிவாசல்களும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளும் தாக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 21ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 250க்கும் அதிகமானோர் மடிந்ததாக அரசாங்கப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
இதுவரை, இந்தக் கலவரங்களின் தொடர்பில் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் சிங்கள பெளத்த அடிப்படைவாதிகளாக இருக்கும் மூவர், கடந்தாண்டு கண்டி மாவட்டத்தில் இதுபோன்ற கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கையிலுள்ள 22 மில்லியன் மக்கட்தொகையில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினர் முஸ்லிம்கள்.


