கோயிலில் துப்பாக்கிச்சூடு: தேடுதல் வேட்டையில் போலிஸ்

தஞ்சோங் காராங்: சிலாங்கூர் மாநிலத்தின் பாரிட் பூரோங் பகுதியிலுள்ள கோயில் ஒன்றில் கடந்த ஞாயிறன்று ஆகாயத்தை நோக்கி நான்கு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அந்த சந்தேக நபர்கள் இரட் டைக் குழல் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படு கிறது. இந்தச் சம்பவம் கடந்த ஞாயிறன்று கோயிலில் நடைபெற்ற ஒரு விழாவின்போது நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில குற்றவியல் புலனாய்வுத் துறை தலைவர் துணை ஆணையர் ஃபாட்சில் அகமது தெரிவித்தார்.

“அந்த சம்பவத்தில் ஆடவர்கள் சிலர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்துவது காணொளியில் வேகமாகப் பரவி வருகிறது.

“அந்த காணொளிக் காட்சியை வைத்துப் பார்க்கும்போது கிட்டத் தட்ட 15லிருந்து 20 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிகிறது,” என்று அவர் விளக்கினார்.

அந்தக் காணொளிக் காட்சி யில் சிவப்பு நிற ஆடையணிந்த ஆடவர் ஒருவர் ஆகாயத்தை நோக்கி ஒருமுறை சுடுகிறார். அதன்பின் மற்றொருவர் பக்கம் திரும்பும் அந்தக் காணொளிக் காட்சி அந்த நபர் இருமுறை ஆகாயத்தை நோக்கிச் சுடுவதைக் காண்பிக்கிறது.

இதைத் தொடர்ந்து ஆரஞ்சு நிற ஆடையணிந்த நபர் ஒருவர் நான்கு முறை ஆகாயத்தில் சுடுவதைக் காணொளிக் காட்சி யில் தெரிகிறது. இதன்பின், நீல நிற ஆடையணிந்த நபர் ஒருவரிடம் அந்தத் துப்பாக்கி கொடுக்கப்பட அவர் மேலும் மூன்று முறை சுடுவதைக் காண முடிவதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் 30லிருந்து 67வயதுக்குட்பட்ட நால்வர் போலிஸ் விசாரணையில் உதவி வருவதாக திரு ஃபாட்சில் அகமது கூறினார்.

“அவர்கள் பயன்படுத்திய துப்பக்கியும் கைப்பற்றப்படும்,” என்று  திரு ஃபாட்சில் தெரிவித் தார்.

இந்த வழக்கு ஆயுதச் சட்டத்தின் 39வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon