காட்மாண்டு: நேப்பாளத்தில் உள்ள கன்சென்ஜுங்கா மலையில் ஏறிய இரண்டு இந்திய மலையேறிகள் மாண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
48 வயது பிப்லாப் பைத்யா, 46 வயது குந்தால் கன்ரார் ஆகியோர் உலகின் மூன்றாவது ஆக உயரமான மலையான கன்சென்ஜுங்கா மலை உச்சியின் அருகில் இருந்தபோது உயிரிழந் ததாக அவர்கள் அங்கு செல்ல வசதிகளைச் செய்துகொடுத்த பிக் பிரமோஷன் ஹைக் நிறுவனம் கூறியது.
கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 8,000 மீட்டர் உயரத்தில் இருந்தபோது இரவு நேரத்தில் அவர்கள் மாண்டதாக நிறுவனம் தெரிவித்தது.
மலை உச்சிக்கு அருகில் இருந்தபோது பைத்யாவின் உடல் நலம் குன்றியதாகவும் அதன் காரணமாக அவர் மரணம் அடைந்ததாகவும் நிறுவனத்தைச் சேர்ந்த பாசாங் ஷெர்பா தெரி வித்தார்.
மலை உச்சியை அடைய கன்ரார் முயன்றபோது அவர் மாண்டதாக அவர் கூறினார்.
மாண்ட இருவரும் கோல் கத்தாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
நோப்பாளத்தில் தற்போது வசந்தகாலம்.
அந்நாட்டில் உள்ள பல உயரமான மலைகளில் ஏற இது உகுந்த காலமாகும்.
இதற்காக உலகெங்கிலும் உள்ள மலையேறிகள் பலர் அங்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேப்பாளத்தில் வசந்தகாலம் இம்மாதத்துடன் முடிகிறது.

