ஷங்ஹாயில் இடிந்து விழுந்த கட்டடம்: ஐவர் மரணம்

ஷங்ஹாயில் இடிந்து விழுந்த கட்டடம்: ஐவர் மரணம்

1 mins read
3a6659ab-af98-4a4e-b0b7-8638572f3b99
கட்டடம் இடிந்து விழுந்ததை அடுத்து, இடிபாடு களிலிருந்து 14 பேரை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர். இடிபாடுகளுக்கு அடியில் கட்டுமான ஊழியர்கள் சிக்கிக்கொண்ட தாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் ஐவர் மாண்டதாக அதிகாரிகள் கூறினர். படம்: ராய்ட்டர்ஸ் -

ஷங்ஹாய்: சீனாவின் ஷங்ஹாய் நகரில் வர்த்தகக் கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்தது. இதில் ஐவர் மரணம் அடைந்தனர்.

இடிபாடுகளுக்கு அடியிலிருந்து 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மொத்தம் 19 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. ஒரு வரைக் காணவில்லை என்றும் அவரைத் தேடும் பணி தொடர் வதாகவும் கூறப்பட்டிருந்தது.

சீன நேரப்படி நேற்று காலை 11.30 மணிக்கு மத்திய ஷங்ஹாயில் இருந்த அந்த இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.

கட்டடம் இடிந்து விழுந்த தற்கான காரணம் தெரிவிக்கப் படவில்லை.

ரத்தக் காயங்களுடனும் தூசி படர்ந்த ஆடைகளுடனும் இருந்த கட்டுமான ஊழியர்களை மீட்புப் பணியாளர்கள் இடிபாடு களிலிருந்து மீட்பதைக் காட்டும் படங்களை சீனாவின் அவசரகால அமைச்சு வெளியிட்டது.

இடிந்து விழுந்த கட்டடம் இதற்கு முன்பு மெர்சடிஸ் பென்ஸ் கார் விற்பனைக்குப் பயன் படுத்தப்பட்டதாக சீனாவின் தீயணைப்புப் படை கூறியது.

அந்தக் கட்டடம் கலைகள் மற்றும் புத்தாக்கத் தளமாக மறுசீரமைக்கப்பட்டு வந்ததாக சீன ஊடகம் தெரிவித்தது.