மலேசியாவின் குவாந்தான் மாநிலத்தில் பண்ணை ஒன்றிலிருந்து தப்பித்த குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் உயிரிழந்தார்.
வியாழக்கிழமை இரவு 9.40 மணிக்கு நேர்ந்த இந்த விபத்தில் 22 வயது முகம்மது ஷக்ரி சே அரிஸ் சம்பவ இடத்திலேயே மாண்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர். கும்மிருட்டில் ஓட்டிக்கொண்டிருந்ததால் குதிரை எதிரே இருந்தது முகம்மது ஷக்ரிக்குத் தென்படாமல் இருந்திருக்கலாம் என்றனர் அதிகாரிகள். முகம்மது ஷக்ரியின் தலையிலும் உடலின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகப் பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.
இந்த விபத்தில் குதிரையும் சம்பவ இடத்திலேயே மாண்டது. லிப்பிஸ் மாவட்டத்திலிருக்கும் பண்ணை ஒன்றிலிருந்து அது தப்பித்துச் சென்றதாக போலிசார் கண்டுபிடித்தனர்.

