நோயாளிகளின் உடலில் நஞ்சைக் கலந்த மருத்துவர் மீது குற்றச்சாட்டு

ஸ்ட்ராஸ்பர்க்: பிரான்சில் நோயாளி களின் உடலில் நஞ்சைக் கலந்ததன் தொடர்பில் மயக்க மருந்தைச் செலுத்தும் பிரஞ்சு மருத்துவர் ஒரு வர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையின்போது வேறு ஒன்பது நோயாளிகளிடமும் 47 வயது ஃபிரடரிக் பெசியர் (படம்) எனும் அந்த மருத்துவர் அதேபோல் நடந்துகொண் டதன் விளைவாக ஏற்பட்ட மரணங் களின் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படுகின்றது.

தமது மருத்துவத் திறமையை வெளிப்படுத்த அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்குச் செலுத்தும் மயக்க மருந்தில் நஞ்சைக் கலந்து அவர்களுக்கு அவசரநிலை ஏற்பட்ட பின் விரைந்து உதவி உயிர் பிழைக்க வைத்ததுபோல ஃபிரடரிக் நடித்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப் பட்டுள்ளது.

ஆனால் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஃபிரடரிக் மறுத்துள்ளார். அந்தக் குற்றங்கள் தமது மருந்தகத்தில் நிகழ்ந்ததை அவர் ஒப்புக்கொண்டாலும்  அவற்றுக்குத் தாம் பொறுப்பில்லை என்றார் அவர். எனினும், விசாரணை நடைபெறும் வேளையில் அவரைத் தடுப்புக்காவலில் வைக்குமாறு அர சாங்கத் தரப்பு துணை வழக்கறி ஞர்கள் கேட்டுக்கொண்டனர். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஃபிரடரிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon