திறனாளர்களை ஈர்க்க டிரம்ப் முன்மொழியும் பரிந்துரைகள்

வா‌ஷிங்டன்: அமெரிக்கக் குடியுரி மைக்கான ‘கிரீன் கார்டு’ வழங்கு தலில் தகுதி, திறமை அடிப்படை யிலான பல்வேறு காரணிகளை உள்ளடக்கி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிய பரிந்து ரைகளை முன்மொழிந்துள்ளார்.

குடும்ப அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கும் நடைமுறை களுக்குப் பதிலாக பிற காரணி களுடன் கல்வி, தனிப்பட்ட ஆற்றல்கள், ஆங்கில மொழித் திறன் ஆகிய தகுதிக்கூறுகள் அடிப்படையிலான கிரீன் கார்டு வழங்கும் முறையை திரு டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.

கிரீன் கார்டு வழங்குவதில் திறன் அடிப்படையிலான புதிய காரணிகளைச் சேர்ப்பதன் மூலம் கிரீன் கார்டு வழங்கப்படும் எண் ணிக்கையில் பெரிய அளவில் குறைவு இருக்காது என்று கூறப் படுகிறது.

தற்போது கிரீன் கார்டு பெற்ற வர்களில் 12 விழுக்காட்டினர் அமெரிக்காவுக்குள் திறன் அடிப் படையிலான ‘எச்1பி’ விசா மூலம் நுழைந்தவர்கள். 66 விழுக்காட் டினர் குடும்ப அடிப்படையிலான கிரீன் கார்டு பெற்றவர்களாவர். இந்தப் புதிய பரிந்துரையின் மூலம் திறன் அடிப்படையிலான கிரீன் கார்டு வழங்கல் 57 விழுக்காடாக உயரும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு திறன் அடிப் படையில் 70 விழுக்காடு ‘எச்1பி விசா’ இந்தியர்களுக்கு அளிக்கப் பட்டது. இவை பெரும்பாலும் கிரீன் கார்டாக மாற்றப்பட்டு உள்ளன. 

புள்ளிகள் அடிப்படையிலான கிரீன் கார்டு நடைமுறைகளில் இந்தியர்கள் அமெரிக்கா சென்ற பிறகு பெற்றோரை அங்கு அழைத்துச் செல்ல முடியுமா என்பது பற்றி இந்தப் புதிய முறையில் தெளிவாக விளக்கப் படவில்லை. ஆனால், மனைவிகள் மற்றும் குழந்தை களுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும் என்று திரு டிரம்ப் தெரிவித்துள்ளார். திரு டிரம்ப்பின் இப்புதிய கிரீன் கார்டு பரிந்துரைகள், புதிய குடியேற்ற விதிகள் ஆகியவை நடைமுறைப் படுத்தப்பட முடியாதவை என்று ஊடகங்கள் விமர்சிக்கின்றன.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon