தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாத சந்தேக நபர்களைக் கைது செய்த இந்தோனீசிய போலிஸ்

தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாத சந்தேக நபர்களைக் கைது செய்த இந்தோனீசிய போலிஸ்

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம் அறிவிக் கப்படவுள்ள நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர் புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்தோ னீசிய போலிஸ் நேற்று தெரிவித் தது. இந்த மாதம் மட்டும் கிட்டத் தட்ட 30 சந்தேக நபர்கள் கைதா கியுள்ளனர்.

இவ்வாண்டு தொடக் கத்திலிருந்து பார்த்தால் நாடு முழுவதும் 60 பேர் தடுத்து நிறுத்தப் பட்டிருப்பதாக போலிஸ் கூறியது. அதிகாரிகளுடன் நடந்த மோதலில் எட்டு வேறு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டதாக தெரி விக்கப்பட்டது.

கைதானவர்களில் சிலர், வெடி பொருட்களை உருவாக்குவதில் திறன் பெற்றவர்கள் என்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங் கரவாத அமைப்புடன் சேர்ந்து அவர்கள் சண்டையிட்டனர் என்றும் போலிஸ் கூறியது. இந்நிலையில், 32,000 ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.