ஷங்ஹாய் வர்த்தகக் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது

ஷங்ஹாய் வர்த்தகக் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது

1 mins read

ஷங்ஹாய்: ஷங்ஹாயில் வர்த்தகக் கட்டடம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டுமானத் தொழிலாளர்கள் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு தவித்தனர்.

கட்டட இடிபாடுகளுக்குள் 25 பேர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்களில் 10 பேர் கடுமையான காயத்தால் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். இடிபாடுகளுக்குள் இன்னும் எவரேனும் சிக்கியுள்ளனரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், தேடுதல் மீட்புப் பணிகள் முடிந்துவிட்டதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.