எவரெஸ்ட் மலையில் இந்தியர் மரணம்

காட்மாண்டு: எவரெஸ்ட் மலை யில் இந்திய ஆடவர் ஒருவர் மாண்டார். நேற்று முன்தினம் கடல் மட்டத்திலிருந்து 7,920 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் முகாமில் 28 வயது ரவி சங்கர் மாண்டு கிடக்கக் காணப்பட்டார். எவரெஸ்ட் மலையை அடைந்த பிறகு அவரும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களும் அங்கு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது ரவி சங்கர் இறந்ததாகக் கூறப்படுகிறது.

“அவரது உடலை இந்தியா வுக்குக் கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படு கிறது,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் மலையேறி களுக்கத் தேவையான ஏற்பாடு களையும் வழிகாட்டுதல் சேவை யையும் வழங்கும் செவன் சமிட் டிரேக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மிங்மா ஷேர்பா கூறினார்.

இந்நிலையில், எவரெஸ்ட் மலையில் அயர்லாந்தைச் சேர்ந்த மலையேறி ஒருவரைக் காண வில்லை என்றார் அவர். கடல் மட்டத்திலிருந்து 8,300 மீட்டர் உயரத்தில் இருந்தபோது 39 வயது சீமஸ் லாலஸ் விழுந்த தாகக் கூறப்படுகிறது.

அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ஷேர்பா தெரிவித்தார்.

மாண்ட ரவி சங்கரும் காணாமல் போன சீமஸ் லாலசும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்த முதல் கறுப்பினத்தவர் எனும் பெருமை அந்தக் குழுவைச் சேர்ந்த சாரே குமாலோவைச் சேரும். இதற்கிடையே, மகலூ மலையில் ஏறிய 35 வயது இந்திய ராணுவ  வீரர் ஒருவர் மரணம் அடைந்தார். மலை உச்சி யிலிருந்து திரும்பிக்கொண் டிருந்தபோது அவர் மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமையன்று 52 வயது இந்திய ராணுவ வீரர் ஒருவர் காணாமல் போனார். 

“வானநிலை மோசமாக இருந் தது. அவர் பின்தங்கி இருக்க லாம். தேடிப் பார்த்தும் அவரைக் காணவில்லை. தொடர்ந்து தேடுவோம்,” என்று ஷேர்பா கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

94 வயதிலும் சாவகாசமாக குதிரை சவாரி செய்த டாக்டர் மகாதீர். படம்: இணையம்

16 Sep 2019

புகைமூட்டம் சூழ குதிரை சவாரி செய்த மலேசிய பிரதமர்

சமூக ஊடகங்களில் பிரபலம் அடைந்து ‘லைக்’களைப் பெற வேண்டும் என்பதற்காக உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான முறையில் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் இந்தத் தம்பதி. படம்: இன்ஸ்டகிராம்

16 Sep 2019

மரணத்தின் விளிம்பில் செல்ஃபி எடுத்த தம்பதியர்