மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மலேசியக் கல்வி அமைச்சர்

கோலாலம்பூர்: மலேசியாவின் கல்வி அமைச்சர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மாணவர்களின் வெள்ளைக் காலணிகள் மிக எளிதில் அழுக் காவதால் கறுப்பு காலணிகளுக்கு மாற வேண்டும், பள்ளிகளில் ரொக்கமில்லாப் பணம் செலுத்தும் முறைக்கு மாற வேண்டும், தொழில்முனைப்பை ஊக்குவிக்க ஐந்து பல்கலைக்கழக வளாகங்களில் பெட்ரோல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்பன போன்ற பரிந்துரை களை அவர் முன்வைத்திருந்தார்.  

இவற்றுக்கு எதிரான அதிருப்திக் குரல்கள் அடங்குவதற்குள் மேலும் ஒரு சர்ச்சையை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

தனியார் துறை கூடுதல் மலாய்க் காரர்களை வேலையில் சேர்த்துக் கொண்டால் புகுமுக வகுப்புகளில் மலாய் மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டைக் குறைப்பது குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் இவை இரண்டிற்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

94 வயதிலும் சாவகாசமாக குதிரை சவாரி செய்த டாக்டர் மகாதீர். படம்: இணையம்

16 Sep 2019

புகைமூட்டம் சூழ குதிரை சவாரி செய்த மலேசிய பிரதமர்

சமூக ஊடகங்களில் பிரபலம் அடைந்து ‘லைக்’களைப் பெற வேண்டும் என்பதற்காக உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான முறையில் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் இந்தத் தம்பதி. படம்: இன்ஸ்டகிராம்

16 Sep 2019

மரணத்தின் விளிம்பில் செல்ஃபி எடுத்த தம்பதியர்